கவுதம் ராம் கார்த்திக்கின் ஆவணப்படம்-எதை பற்றி தெரியுமா ?
Oct 7, 2026, 07:00 IST
தமிழ் இளம் நடிகர் கவுதம் ராம் கார்த்திக், நடிப்பை தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இந்த ஆர்வத்தின் மற்றொரு பகுதியாக, நண்பர்களுடன் இணைந்து ஆவணப்பட வீடியோ ஒன்றை கவுதம் ராம் கார்த்திக் உருவாக்கியுள்ளார். இதில் அவரது இதயத்துக்கு நெருக்கமான பைக் ‘கோரா’ முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கவுதம் ராம் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள் உள்பட பல்வேறு தருணங்களை வீடியோ பதிவு செய்துள்ளது. ஒரு ரைடருக்கும், அவரது பைக்கிற்கும் இடையே உருவாகும் நெருக்கத்தையும், பைக் மீதான கவுதம் ராம் கார்த்திக்கின் ஆர்வத்தையும் இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.