நடிகர் ரகுவரனின் திரைப்பயணம் குறித்த ஆவணப்படம்.. போஸ்டர் வெளியீடு...!
Mar 20, 2025, 17:14 IST
மறைந்த நடிகர் ரகுவரனின் திரைப்பயணம் தொடர்பான ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியானது ‘யாரடி நீ மோகனி’. ‘முதல்வன்’, ‘பாட்ஷா’, ‘ரட்சகன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரகுவரனின் நடிப்புக்கு அழுத்தமான நடிப்புக்குச் சான்று. 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் நடிகர் ரகுவரன் காலமானார்.