×

சிவகார்த்திகேயன் ‘டான்’ பட ஷூட்டிங் எப்போது ? சூப்பர் அப்டேட்…

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ‘அயலான்’ படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. லைக்கா புரொக்ஷன் சார்பில் சுபாஷ் கரண் தயாரிக்கும் இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதையடுத்து அடுத்த படத்தின் அப்டேட் வர தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இணையும் நடிகர், நடிகைகள் பற்றி
 

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

‘அயலான்’ படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. லைக்கா புரொக்ஷன் சார்பில் சுபாஷ் கரண் தயாரிக்கும் இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதையடுத்து அடுத்த படத்தின் அப்டேட் வர தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இணையும் நடிகர், நடிகைகள் பற்றி அறிவிப்பு கடந்த இரண்டு நாளாக வந்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். மேலும் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சமுத்திரகனி, காமெடி நடிகர் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘டான்’ படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.