×

Don’t miss it… ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குறித்து இயக்குநர் ராஜமவுலி பாராட்டு...!

 

சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார்.


அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.
மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படம் முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இப்படம் ஜப்பானிலும் வெளியாகிறது.

இந்நிலையில்,  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குறித்து இயக்குநர் ராஜமவுலி பாராட்டி பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது. தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்தின் மிகச்சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி. தவறவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.