"கீர்த்தி சுரேஷ் எங்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்"-டோரதி பட நடிகர் பேட்டி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு கணவராகவும் சனந்த்துக்கு அண்ணனாகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் சவுந்தரராஜா. அவர் கூறியது: ‘டோரதி’ படம் பேசிய செய்தி மிகப்பெரியது. அந்த படத்தை பார்த்துவிட்டு எனது மனைவி பாராட்டியது மறக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பே திருநங்கைகளுக்காக நான் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளேன். அதில் பல திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
ஒரு இடைவெளிக்கு பிறகு அவர்களை கவுரவிக்கும் படத்தில் நடித்தது சந்தோஷம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் உனக்கு ஜோடி என கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது, நான் நம்பவில்லை. பிறகுதான் அவர் பொய் சொல்லவில்லை என தெரிந்தது. கீர்த்தி சுரேஷ், கொஞ்சமும் ஈகோ இல்லாத ஒரு நடிகை.
தனது காட்சி முடிந்ததும், எங்களுடன் வந்து அமர்ந்துகொள்வார். தனது கேரவனுக்கு போகாமல் எங்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். இந்த படத்தையடுத்து ‘நான் வயலென்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளேன். இதிலும் கதைக்கு திருப்புமுனை தரும் வேடம் ஏற்றுள்ளேன். எனது தொண்டு அமைப்பு மூலம் செய்து வரும் பணிகளையும் தொடர்ந்து செய்தபடி சினிமாவில் நடிப்பேன்.