நடிகர் விஜய்யை சந்தித்த டிராகன் படக்குழு.. இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!
Mar 25, 2025, 12:34 IST

டிராகன் பட வெற்றியை தொடர்ந்து, படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.