பிரபல டப்பிங் கலைஞர், நடிகை ரவீனா ரவியின் தந்தை திடீர் மரணம்!
Aug 31, 2021, 16:02 IST
நடிகை ரவீனா ரவியின் தந்தை காலமாகியுள்ளார்.
பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா. இவர் தமிழ் சினிமாவின் 90-களில் இருந்தே பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவியும் சிறந்த டப்பிங் கலைஞர் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். ரவீனா நடிப்பில் கடைசியாக 'காவல்துறை உங்கள் நண்பன்' திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் ரவீனாவின் தந்தையும் ஸ்ரீஜாவின் கணவருமான ரவீந்திரனாத் திடீரென காலமாகியுள்ளார்.. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரனாத் சிகிச்கை பலனின்றி காலமாகியுள்ளார். தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.