×

துல்கர் தான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ… இயக்குனர் சுதா கொங்கரா ருசிகர பதில்!

இயக்குனர் சுதா கொங்கரா, துல்கர் சல்மான் தான் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப் போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான முழு அங்கீகாரமும் சுதா கொங்கராவையை சேரும். ஒரு பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்டார். இறுதிசுற்று படத்திலே இந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்த சுதா சூரரைப் போற்று மூலம் முன்னணி இயக்குனராக போற்றப்பட்டு வருகிறார். இந்நிலையில்
 

இயக்குனர் சுதா கொங்கரா, துல்கர் சல்மான் தான் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப் போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான முழு அங்கீகாரமும் சுதா கொங்கராவையை சேரும். ஒரு பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்டார். இறுதிசுற்று படத்திலே இந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்த சுதா சூரரைப் போற்று மூலம் முன்னணி இயக்குனராக போற்றப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் துல்கர் சல்மான் தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று தெரிவித்துள்ளார். தங்களுக்கு மிகவும் பிடித்த மலையாள நடிகர் யார் என்ற கேள்விக்கு “மம்முட்டி, மோகன்லால் மிகச் சிறந்த நடிகர், அவர்களின் படங்களைத் தவறாமல் பார்ப்பேன். இருந்தாலும், துல்கர் சல்மான் தான் எனக்குப் பிடித்த நடிகர்.

ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதமும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் நடித்து தோல்வியடைந்த படங்களைக் கவனித்தால் கூட, அதில் அவருடைய நூறு சதவீத பங்களிப்பைச் சரியாக கொடுத்திருப்பார் துல்கர்” என்று பதிலளித்துளளார்.