×

Fire படத்தின் `டும் டும் கல்யாணம்' வீடியோ பாடல் ரிலீசானது  

 

பிக் பாஸ் பாலாஜி நடித்த Fire படத்தில் இடம்பெற்றுள்ள  `டும் டும் கல்யாணம்' வீடியோ பாடல் ரிலீசானது  

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படம் 2020 ஆம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன். இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

<a href=https://youtube.com/embed/K9WkTnYq5VM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/K9WkTnYq5VM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடலான டும் டும் கல்யாண, பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை டிகே இசையமைப்பில் அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி கிஷன் இணைந்து பாடியுள்ளனர்.