×

‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஸ்னீக் பீக் வெளியீடு

 
 பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. 

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'.  'பீச்சாங்கை' பட நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை  ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்திரம் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பால நந்தகுமார், நக்சலைட் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குணா பாலசுப்பிரமணியம் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருள் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு வரியை வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேரடியாக ஓடிடித்தளமான சோனி லைவ்வில் இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.