×

இவர்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா ?... பகத் பாசில் - சாந்தனு குடும்ப புகைப்படம் வைரல் !

 

நடிகர்கள் பகத் பாசில் மற்றும் சாந்தனு இருவரும் தங்களது திருமணநாளை இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

மலையாள நடிகர் பகத் பாசில் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ‘மாமன்னன்’ படத்திலும், தெலுங்கில் ‘புஷ்பா’ படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பல மொழிகளில் நடித்து வரும் பகத் பாசிலின் மார்க்கெட் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதனால் பட வாய்ப்புகள் பல மொழிகளில் குவிந்து வருகிறது. 

இதற்கிடையே பிரபல நடிகையான நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் 'நேரம்', 'ராஜாராணி',  நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா தம்பதியர் தங்களது 9வது திருமண நாளை கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகர் சாந்தனு, அவரது மனைவி கிக்கி விஜய் கலந்துக்கொண்டனர். 

பகத் பாசில் - நஸ்ரியா தம்பதி திருமண நாளை கொண்டாடிய அதே நாளில் தான் சாந்தனு - கீக்கி விஜய்யும் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இருவரும் ஒரே நாளில் திருமண நாளை கொண்டாடுவதால் இந்த திருமண நாளை கேக் வெட்டி இரு ஜோடிகளும் ஒன்றாக கொண்டாடினர். பகத் பாசில் மற்றும் சாந்தனு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.