டிக்டாக் பிரபலம் இலக்கியா பெயரில் போலி கணக்கு... பணம் மோசடி என புகார்...
Sep 27, 2023, 13:57 IST
டிக்டாக் பிரபலமும், நடிகையுமான இலக்கியா தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
டிக் டாக் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் இலக்கியா. அண்மையில் இவர் பண மோசடி செய்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், இது குறித்து பிரபலம் இலக்கியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி புளூ டிக் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். போலிகணக்குகள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.