×

வந்தாச்சு ‘விடாமுயற்சி’ அப்டேட்! -படத்தில் இணைந்த முன்னணி கதாநாயகி.

 

தல அஜித் நடிப்பில் தயாராகவுள்ள விடாமுயற்சி படத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகி ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 62வது படமாக தயாராகவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தை தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மகிழ்திருமேனி இயக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிபதிவு செய்ய உள்ளார். லைக்கா பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் கோலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம்வரும் பிரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியும்.