பாபி சிம்ஹா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்!
பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகன் புதிய படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்கள் பட்டியலில் நடிகர் செந்தில் சிறப்பு இடம் பெறுவார். கவுண்டமணி- செந்தில் கம்போ காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இப்படி தனது நடிப்பால் மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
பாபி சிம்ஹா அறிமுக இயக்குனர் என்.எ.ராகேஷ் இயக்கத்தில் தடை உடை என்ற படத்தில் நடித்து வருகிறார். முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டேமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்தும் இப்படத்திற்கு ஆதிஃப் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுதுகிறார்.
இந்தப் படத்தில் தான் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு நடிகராக இணைந்துள்ளார். பாபி சிம்ஹா அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார்.