×

பிரபல நடிகையின் பரிதாப நிலை.. பகீர் தகவலை வெளியிட்ட கங்கை அமரன் !

 

நடிகை கனகாவின் தற்போது பரிதாபமான நிலையில் இருப்பதாக இயக்குனர் கங்கை அமரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கனகா. ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’ மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் மூலம் கனகாவிற்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உயர்ந்தது. 

பிசியாக நடித்து வந்த கனகா வாய்ப்பு குறைந்ததால் சினிமாவை விட்டு விலகினார். இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியே இருந்து வருகிறார். இதற்கு காரணம் காதல் தோல்வி என்றும், அதனால் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இயக்குனர் கங்கை அமரன் அளித்துள்ள பேட்டியில் கரக்காட்டக்காரன் படத்தில் கனகாவை அறிமுகப்படுத்தினேன். ரொம்ப நல்ல பொண்ணு. தற்போது அவரின் நிலையை கேள்விப்பட்டேன். தனி அறையில் வாழ்ந்து வருவதை கேள்விப்பட்டேன். தொலைப்பேசியில் தொடர்புகொண்ட போது அவர் எடுக்கவில்லை. அவர் வாழ்க்கையில் ஏதோ நடந்துள்ளதால் விரக்தியில் உள்ளார். தினமும் சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. பால்காரர் மட்டும் தினமும் பால் போட்டுவிட்டு போகிறார் என்று கூறினார்.