×

பிரபல படத்தொகுப்பாளரும், இயக்குனருமான 'ஆர்.விட்டல்' காலமானார்.

 

படத்தொகுப்பாளராக சினிமாவில் ஜொலித்து பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.விட்டல். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில்  மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 91.

முரட்டு காளை, ஜப்பானில் கல்யாணராமன், படிக்காதவன், ஆடுபுலி, பாயும் புலி, ராஜா சின்ன ரோஜா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும்  பணியாற்றியுள்ளார். இவர் எடிட்டிங்கை தவிர முடிசூடா மன்னன், தொட்டதெல்லாம் பொன்னாகும் போன்ற தமிழ் படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வீட்டுக்கு வந்த மருமகள், பெண்ணை சொல்லி குற்றமில்லை, முத்தான முத்தல்லவோ,உன்னைதான் தம்பி, எங்களுக்கும் காதல்வரும் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இவருக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இதில் மனைவி மற்றும் மகன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மகள் பராமரிப்பில் இருந்த விட்டல் இன்று மாலை 3மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு திரைதுறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.