×

ஹீரோவாக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்...!

 

பிரபல தயாரிப்பாளர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழில் நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானர் கேஜே ராஜேஷ். கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவர் ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
இதில், ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், டாக்டர், அயலான் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
 



ஸ்வதிக் விஷன்ஸ் தயாரிக்கும் இந்த முதல் படத்தின் அறிவிப்பு நாளை (மே. 23) காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.