×

க்யூட் குழந்தைகளை முதல்முறையாக காட்டிய சின்மயி... லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் !

 

பாடகி சின்மயி தனது க்யூட் குழந்தைகளை முதல்முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். 

சன் டிவியில் ஒளிபரப்பான‌ சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் சின்மயி. முதன்முதலில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' இடம்பெற்ற 'தெய்வம் தந்த பூவே' பாடலை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் பாடலே ஏஆர் ரகுமான் இசையில் பாடியது சின்மயியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செனறது‌. 

அதன்பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாம் டப்பிங் கலஞராகவும் இருந்து வருகிறார். 'சில்லனு காதல்' ‌ படத்தின் மூலம் டப்பிங் கலைஞரான அறிமுகமான அவர், சமந்தா, திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

 இதற்கிடையே கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த சின்மயி கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் தனது குழந்தைகளை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்து வந்த சின்மயி, முதலாமாண்டு பிறந்தநாளையொட்டி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.