தந்தையானார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் ‘96’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘காதலே காதலே’ ஆகிய பாடல்களின் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
‘நெடுஞ்சாலை’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘மான்ஸ்டர்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடல்கள் எழுதியுள்ளார். 5 வருடங்களுக்கும் மேலாக பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் நேத்தா, கீதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘வாகை சூட வா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர சர சாரக்காத்து’ பாடல் தான் எழுதியது என்றும், அதில் சில வார்த்தைகளை மாற்றி தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்டார் வைரமுத்து என்றும் சில வருடங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியவர் கார்த்திக் நேத்தா என்பது குறிப்பிடத்தக்கது.