×

லியோ டிக்கெட்டை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரசிகர் ஒருவர் லியோ பட டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ படத்தை தயாரித்துள்ளது.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர், லியோ  டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி உள்ளார். அந்த பணம் விஜய்யின் இலவச கல்வி பயிலகத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவருக்கு விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.