×

பிரபல நடிகையின் காலில் விழுந்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ
 

 

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு ஜூலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சு குரியன் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

null