பூ கொடுத்து சமந்தாவுக்கு ப்ரபோஸ் செய்த ரசிகர் -எந்த விழாவில் தெரியுமா ?
Jun 1, 2026, 07:00 IST
நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்தார். சிறிது காலம் காதலித்த இவர்கள், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து ‘மா இன்டி பங்காரம்’ படத்தைத் தயாரித்துள்ளனர். சமந்தா நாயகியாக நடிக்க, ராஜ் நிடிமோரு கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகிறது.
இதன் டிரெய்லர் விழாவில், தன் கணவர் ராஜ் நிடிமோரு பற்றி சமந்தா மனம் திறந்து பேசினார். ‘ராஜ் நிடிமோரு உங்களை எப்போதாவது சங்கடப்படுத்தி இருக்கிறாரா?’ என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு, ‘‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அவர் என்னை ஒருபோதும் இரிடேட் செய்தது இல்லை’’ என சமந்தா பதில் சொன்னார். ‘‘இயக்குனர் நந்தினி ரெட்டி, ராஜ் நிடிமோரு இருவருமே பெர்ஃபெக்ட். ஆனால் நந்தினி ரெட்டி இரிடேட் செய்வது எனக்குப் புதிதல்ல, 15 வருடங்களாகச் சகித்து வருகிறேன், அது பழகிவிட்டது’’ என சமந்தா ஜாலியாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் பூ கொடுத்து சமந்தாவுக்கு ப்ரபோஸ் செய்தது ரசிகர்களை கவர்ந்தது.