×

அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்- திக்குமுக்காடிப்போன 'சிவராஜ் குமார்'.

 

சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிவரும் ஜெயிலர் படத்தில் மாஸ்ஸாக கேமியோ ரோலில் நடித்து ஆசத்தியுள்ளார் சிவராஜ்குமார். இந்த நிலையில் இவர் மைசூருவில் உள்ள தியேட்டருக்கு ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது அங்கிருந்த ரசிகர்கள் அவரது காரை சுற்றுவளைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேமியோ ரோலுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் சிவராஜின் கேமியோ ரோல்தான் இவ்வளவு சிறப்பாக பேசப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு பவர்புல் கதாப்பாத்திரமாக அது அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த சிவராஜின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள் அன்பு மழை பொழிந்துள்ளனர். அவர்களது அன்பில் திழைத்துப்போன சிவராஜின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.