×

ரசிகர்கள் கொண்டாட்டம்..!   டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்..! 

 
டிஆர்பி ரேட்டிங் வியாழக்கிழமை அன்று வெளியாகும் நிலையில் நேற்று வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் ஆச்சரியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் முதல் இடத்தை பெற்றுள்ளது.

நேற்று வெளியாகி உள்ள டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ’சிறகடிக்க ஆசை’ இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’சிங்க பெண்ணே’, மூன்றாவது இடத்தில் ’கயல்’, நான்காவது இடத்தில் ’மருமகள்’ மற்றும் ஐந்தாவது இடத்தில் ’வானத்தைப்போல’ ஆகிய சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஆறாவது இடத்தில் ’பாக்கியலட்சுமி’, ஏழாவது இடத்தில் மல்லி’, எட்டாவது இடத்தில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’, ஒன்பதாவது இடத்தில் ’சுந்தரி’ மற்றும் பத்தாவது இடத்தில் ’சின்ன மருமகள்’ ஆகிய சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை ’சிறகடிக்க ஆசை’ மூன்று முதல் ஆறு வரை உள்ள இடங்களில் தான் மாறி மாறி வந்து கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்து இருப்பதை அடுத்து ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சன் டிவி இந்த டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்த வாரங்களில் முதல் இடத்தை ’சிறகடிக்க ஆசை’ தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.