‘ராமம் ராகவம்’ படத்தில் அப்பா, மகன் கதை
Sep 12, 2024, 15:00 IST
சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ராமம் ராகவம். தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கி நடித்துள்ள இதில் ஹரிஷ் உத்தமன், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ளனர். அப்பா, மகன் கதையான இதை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
“சமூகத்துக்குத் தேவையான கதையை கொண்ட படமாக இது உருவாகி இருக்கிறது. கலகலப்பான குடும்ப படமான இதை சமீபத்தில் தெலுங்கு திரையுலகினர் சிலர் பார்த்தனர். சமுத்திரக்கனியையும் இயக்குநர் தன்ராஜையும் பாராட்டியுள்ளனர். இந்தப் படத்தின் ‘கொலசாமி போல’ பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாக இருக்கிறது” என்றது படக்குழு.