×

ஐந்தாம் வேதம் வெப் தொடரின் டிரைலர் வெளியீடு
 

 

நடிகை சாய் தன்ஷிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் வெளியாகவுள்ளது. இந்த வெப் தொடரை நாகா இயக்கியுள்ளார். நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார். இந்த தொலைக்காட்சி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐந்தாம் வேதம் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி மகேந்திரன், கிரிஷா குருப் , பொன்வன்னன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தொடரை அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இத்தொடரின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்பொழுது இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தொடர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சாய் தன்ஷிகாவிடம் ஒரு ஆன்மிக பெட்டியை கொடுத்து ஐயங்காரபூரத்தில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் கொடுக்க சொல்கிறார்கள். அந்த மர்மம் நிறைந்த பெட்டியை சுற்றியே டிரைலர் நகர்கிறது. இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் இருப்பதனால் இத்தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/UBszjOfldp0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UBszjOfldp0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">