×

வெற்றியை கொண்டாடிய ‘ஃபைட் கிளப்’ படக்குழு.

 

‘ஃபைட் கிளப்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

லோகேஷ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனமும், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஃபைட் கிளப்’. இந்த படத்தை அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். உறியடி விஜய்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க சண்டையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் மொத்த வசூல் ஒன்பது கோடி ரூபாய் என கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.