×

சிவகார்த்திகேயன் கைவசம் எத்தனை படங்கள் தெரியுமா ?-தெரிஞ்சா அசந்துடுவீங்க !

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ் ஆக உள்ள படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. .

இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் ஒன்று உள்ளது. அப்படத்தை விக்ரம் வேதா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் இயக்க உள்ளார்களாம்.

சிவகார்த்திகேயனுக்கு புஷ்கர் காயத்ரி சொன்ன கதை பிடித்துப் போனதால் அவர் அப்படத்தில் கன்பார்ம் நடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இப்படத்தில் நடிப்பதற்குள் சிவகார்த்திகேயனின் சம்பளம் 100 கோடியை எட்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் தயாராக உள்ளது.

பராசக்தி படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

அவர் நடிப்பில் தற்போது பராசக்தி என்கிற திரைப்படமும் உருவாகி வருகிறது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.