சூர்யா கைவசம் என்னென்ன படங்கள் தெரியுமா ?-இதோ பட்டியல்
Sep 16, 2026, 08:00 IST
ஜித்து மாதவன் இயக்கத்தில், தனது 47வது படத்தில் நடிக்கிறார் சூர்யா. அவருடன் நஸ்ரியா நாசிம், நஸ்லென் கே.கபூர், ஜான் விஜய் நடிக்கின்றனர். சூர்யாவின் 48வது படத்தை ‘ஜெய் பீம்’ த.செ.ஞானவேல் எழுதி இயக்குகிறார். இந்நிலையில், சூர்யாவின் 49வது படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாகவும், `டிசி’ படத்தில் நடித்திருந்த வாமிகா கபி சூர்யா ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகவில்லை. சாய் அப்யங்கர் இசை அமைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே சூர்யா நடித்த ‘கருப்பு’ என்ற படத்துக்கு சாய் அப்யங்கர் இசை அமைத்திருந்தார். ‘ஜன நாயகன்’ படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் படம் என்பதாலும், சூர்யாவுடன் வாமிகா கபி கூட்டணி அமைப்பதாலும், ‘சூர்யா 49’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.