×

கவினின் `மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ் 

 

கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பிளடி பெக்கர்’. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.