×

ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று தலைவர் 170 முதல் தோற்றம் வெளியீடு

 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடித்து. அதைத் தொடர்ந்து மும்பையில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார். 

இந்நிலையில், தலைவர்170 படத்தின் முதல் தோற்றம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி டிசம்பர் 12-ம் தேதி இப்படத்தின் முதல் தோற்றம், தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.