‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்
எஸ். ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுல் எக்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குகிறார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. வரும் தீபாவளி பண்டிகை அன்று திரைப்படம் வெளியாகிறது.