×

பார்க்கிங் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

 

ஹரிஸ் கல்யாண் மற்றும் இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் பார்க்கிங் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகிறது.

எல்.ஜி.எம். படத்தை தொடர்ந்து, த்ரில்லர் படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் இப்படத்துக்கு 'பார்க்கிங்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.