×

 தமிழ் சினிமாவில் வரலாறு படைத்துள்ள முதல் திருநங்கை இயக்குநர்!

 

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கி, நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது.தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் இயக்கி, நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. First copy productions தயாரிப்பில் மாலா மணியன் தயாரிப்பில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue sunshine).

சம்யுக்தா விஜயன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்டீவ் பெஞ்சமின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு ஆகிய மூன்று பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தை இயக்கியதன் மூலம் சம்யுக்தா விஜயன், தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், அமேசான் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பனிபுரிந்துள்ளார்.

null



பின்னர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக கடந்த 2019இல் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் ஏற்பட தற்போது ‘நீல நிறச் சூரியன்’ படத்தை இயக்கியுள்ளார். பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் தான் பெண் என்பதை உணர்ந்து, மாற நினைத்து சிகிச்சை செய்ய முடிவு செய்கிறார். அவர் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘நீல நிறச் சூரியன்’ வெளியாவதற்கு முன்பாகவே IIFA 2023 திரைப்பட விழா, கிளாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டை பெற்றுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் வெளியிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் கொட்டுக்காளி, வாழை, ஜமா போன்ற புதிய முயற்சிகள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படமும் பாராட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.