இயக்குனர் ராஜமவுலி மீது முன்னாள் நண்பர் பகீர் குற்றசாட்டு...!
Feb 28, 2025, 15:25 IST
இயக்குனர் ராஜமவுலி மீது முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ் பகீர் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி 29 எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜமவுலியின் முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ், ராஜமவுலியின் டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். 1990 முதல் ராஜமௌலியை அறிந்திருப்பதாகவும், தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நபர்களுக்கு இடையேயான காதல் பிரச்சனையே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.