‘கேம் சேஞ்சர்’ படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம்: இயக்குநர் ஷங்கர் 

 
shankar

‘கேம் சேஞ்சர்’ இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி படத்தின் HD PRINT இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.game changer
 
தற்போது இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து இயக்குநர்களுக்கும் என்ன செய்தாலும் திருப்தி வராது. ‘கேம் சேஞ்சர்’ இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்க நிறைய நல்ல காட்சிகளை தூக்கிவிட்டோம். படத்தில் அவ்வளவு காட்சிகளையும் வைக்க முடியாது. ஆனால், அவை அனைத்துமே இந்தக் கதைக்குள் தான் வருகிறது. மொத்தமாக 5 மணி நேரக் காட்சிகள் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.