×

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய கங்குவா...!

 
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் டிரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில். பல திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கங்குவா திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் . இந்நிலையில் கேரளாவில் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டும் ரூபாய் 1 கோடியை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் முன்பதிவு வசூல் 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர்கள் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.