×

மும்பையில் ப்ரமோஷன் பணிகளை தொடங்கிய கங்குவா படக்குழு

 
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.


 படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாகூறியுள்ளார். இந்நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற கங்குவா புரமோஷனில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்து கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து சூர்யா தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.