×

38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் கங்குவா திரைப்படம்

 

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

கங்குவா திரைப்படம் தொடக்கத்தில் 10 மொழிகளில் வௌியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 38 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.