'கங்குவா' படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலான வெற்றியை பெற்றது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும், 3டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில், "கருங்காட்டு புலிக்கூட்டம் ஒன்னா உறும்புச்சுனா.." என்ற டயலாக்வுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ட்ரெய்லரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என இணையத்தில் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கங்குவா படம் அக் 10ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருப்பதால், படக்குழு தேதியை மாற்றி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.