×

 சிறப்பு போஸ்டர் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்த 'கங்குவா' படக்குழு

 

சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கங்குவா’ படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக  உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.