×

ஆங்கிலேயர் அடக்குமுறையை பேசும் ‘1947 ஆகஸ்டு 16’... கௌதம் கார்த்திக் பட டிரெய்லர் வெளியீடு !

 

ஆங்கிலேய அடக்குமுறை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ள ‘1947 ஆகஸ்டு 16’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘1947 ஆகஸ்டு 16’. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரேவதி ஷர்மா கதாநாயகியாகவும், விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ப்ரீயட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை  பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரொக்ஷன், பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் காட் ப்ளஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. 

தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் ஒரு கிராமத்தின் கதைக்களம் கொண்ட படம் இது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

<a href=https://youtube.com/embed/BUucs4oFyi8?autoplay=1&mute=1&start=1><img src=https://img.youtube.com/vi/BUucs4oFyi8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">