×

சிம்பு நடிக்கும் ரீமேக் படத்தின் பெயர் ”பத்து தல” இராவணன் ஆகிறாரா சிம்பு ?

நடிகர் சிம்பு,கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள முப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கின் டைட்டில் ”பத்து தல” என வைக்கப்பட்டுள்ளது . ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். பல மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் அப்படியே முடங்கியது. தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குனர் கிருஷ்ணா, நீங்கள் பத்து தல என்று சொல்லும்போது, உடனடியாக
 

நடிகர் சிம்பு,கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள முப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கின் டைட்டில் ”பத்து தல” என வைக்கப்பட்டுள்ளது .

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். பல மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் அப்படியே முடங்கியது. தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய இயக்குனர் கிருஷ்ணா,

நீங்கள் பத்து தல என்று சொல்லும்போது, உடனடியாக ராவணனைப் பற்றி நினைப்பீர்கள், சிம்புவின் கதாபாத்திரமும் அதுபோல ஒன்று தான். எனவே, தலைப்பு படத்திற்கு சரியாக பொருந்துகிறது என்று நாங்கள் நினைத்தோம், இது ஒரு அரசியல் மாஃபியா திரில்லர் படம் என்று மட்டும் நான் சொல்ல முடியும் ” என கூறியுள்ளார்.

மாநாடு படப்பிடிப்பிற்கு பின் சிம்பு இப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது.