×

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கெளதம் கார்த்திக்கின் '1947'.. டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு !

 

 கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947 ’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரொக்ஷன், பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் காட் ப்ளஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947 ’. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டக்களத்தின் ஒரு பகுதியே இப்படத்தின் கதையாக உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரீயட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று ஷான் ரோல்டன் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‌ இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.