அந்த ஏரியா.. இந்த ஏரியா... எல்லா ஏரியாலயும்.. GOAT மட்டும்தான்
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் படக்குழு நேற்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் திரைப்படம் எபிக் ஸ்கிரீன்களிலும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இப்போஸ்டரில் விஜய், அஜ்மல் , பிரசாந்த் மற்றும் பிரபு தேவா கையில் துப்பாக்கியுடன் காணப்படுகின்றனர். இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து மேலும் ஒரு சுவாரசிய அப்டேட் வெளியாகியுள்ளது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5 வெளியாகும் நாள் அன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா திரையரங்களிலும் கோட் திரைப்படம் மட்டுமே ஓடும் என தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலக வரலாற்றில் இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.