ரெக்கார்டுகளை முறியடிக்கும் GOAT படத்தின் டிரைலர்
Aug 18, 2024, 16:38 IST
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தபடத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்பொழுது படத்தின் டிரைலர் யூடியூபில் 20 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா டிரைலரில் வேகமான 10 லட்ச லைக்குகளை பெற்ற திரைப்படம் என சாதனை படைத்துள்ளது.ரசிகர்கள் படத்தின் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.