×

'கோட்' பட டிரெய்லரில் இதை கவனிச்சிங்களா? - ரசிகர்களுக்கு 'Plan B' சஸ்பன்ஸ் உள்ளதா? 
 

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிரெய்லரில் உள்ள டிகோடிங்க் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி கோட் படத்தின் டிரெய்லர் இன்று (ஆக 17) வெளியாகியுள்ளது. டிரெய்லரில் ஆரம்பத்தில் அண்ணன் வரார் வழி விடு என்ற டயலாக் உடன் தொடங்குகிறது. அதன் பின் பிரசாந்த் வாய்ஸ் ஓவரில் விஜய் என்ட்ரி கொடுக்கிறார்.


மேலும் உங்களை லீட் பண்ண போறது புது லீடர் என்ற வசனம் இடம்பெறுகிறது. மேலும் விஜய்யின் 68வது படம் என்பதை குறிக்கும் வகையில், விஜய் '68 international successful operations' கையாண்டுள்ளதாக பிரசாந்த் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து இளம் தோற்றத்தில் வரும் விஜய் அணிந்துள்ள csk டி சர்ட்டில் definitely not என்ற வாசகம் உள்ளது. இது விஜய் சினிமாவை விட்டு விடைபெறக் கூடாது என ரசிகர்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.டிரெய்லரின் கடைசியாக வரும் காட்சியில் விஜய் பூஜை செய்துவிட்டு ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை பாடுகிறார். இந்த முருகன் பாடலை விஜய் கில்லி படத்தில் பாடியது மிகவும் பிரபலமானது.