×

இரண்டாவது முறையாக சென்சார் செய்யப்பட்ட G.O.A.T ஏன் தெரியுமா?

 

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த்,பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தணிக்கை குழு கோட் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கினர். படத்தின் நேர அளவு முதலில் 3 மணி நேரமாக இருந்தது.

இப்பொழுது படத்தின் நேர அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படத்தின் நேரம் தற்பொழுது 3 மணிநேரம்  3 நிமிடங்கள் 14 நொடிகளாக மாறியுள்ளது. படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்லூபர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகிறது.