‘குட் பேட் அக்லி’ படத்தின் ‘காட் ப்ளஸ் யூ’ வீடியோ பாடல் ரிலீஸ்...!
Apr 23, 2025, 16:41 IST
குட் பேட் அக்லி திரைப்படத்தின் காட் ப்ளஸ் யூ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடினர். அதற்கு காரணம், அஜித்தின் வின்டேஜ் படங்களின் தொகுப்பாகவும், பழைய பாடல்களின் ‘வைப்’ மெட்டிரியலாகவும் இந்தப் படம் அமைந்தது. இதனால் படம் வெளியாகி ரூ.240 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.