100 மில்லியன் பார்வைகளை கடந்த கோல்டன் ஸ்பாரோ... புதிய சாதனை...!
May 28, 2025, 18:18 IST
`நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கிய திரைப்படம் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' . ராம் காம் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்தர், ப்ரியா வாரியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் செம்ம வைரலானது.